பாரிசில் ஆயுத முனையில் நகைக்கடையில் கொள்ளை!

Report Print Kavitha in பிரான்ஸ்

பாரிசில் ஆயுத முனையில் நகைக்கடை ஒன்றில் முகமூடி அணிந்த ஆயுததாரிகள் அங்கிருப்பவர்கள் அச்சுறுத்தி நகைகள் பணத்தினை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை 13:00 மணி அளவில் பரிஸ் 11 ஆம் வட்டாரத்தின் rue du Faubourg du Temple வீதியில் உள்ள நகைக்கடையிலேயே இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் கடைக்குள் ஐந்தில் இருந்து ஆறு வரையான கறுப்பு நிற உடை முகமூடி அணிந்த ஆயுததாரிகள் நுழைந்து பின்னர் அங்கிருப்பவர்களை அச்சுறுத்தி நகைகள் பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த கொள்ளையர்கள் கைகளில் ஆயுதங்கள் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து நிமிடத்துக்கும் மேலாக நீடித்த இந்த கொள்ளைச் சம்பவத்தினை நபர் ஒருவர் காணெளியாக படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்ததன் பின்னர் இணையத்தில் பகிரப்பட்ட காணொளி அழிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மதிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்