சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த விபரீதம்: பிரான்ஸ் பயணி பலி

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

தாய்லாந்து அருவியில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்ததில் பிரான்ஸ் சுற்றுலா பயணி பலியானார்.

தாய்லாந்தின் மிக பிரபலமான சுற்றுலா தளம் Koh Samui, இதன் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் 33 வயதான பிரான்சை சேர்ந்த Bastien Palmier என்பவர் Na Mueang 2 அருவியில் செல்பி எடுக்க முயன்றபோது தவறி விழுந்ததில் பலியானாதாக தாய்லாந்து பொலிசார் அறிவித்துள்ளனர்.

ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் கயிற்றை தாண்டி அருவியின் முனைப்பகுதிக்கு சென்றதால் இந்த விபத்து நடந்ததாக அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் அதிகமாக கொட்டியதால் அருவி வழுக்கும் தன்மையுடன் இருந்ததால் பலியான பிரான்ஸ் பயணியின் சடலத்தை மீட்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதாக மீட்புப்பணியில் ஈடுபட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் இதே இடத்தில் செல்பி எடுக்கும்போது ஒருவா் தவறி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்