பிரான்சில் கடற்கரைகள் மூடல்.. தினமும் கரை ஒதுங்கும் மிகவும் ஆபத்தான பொருள்: கண்டறிய முடியாமல் அதிகாரிகள் திணறல்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் அட்லாண்டிக் கடற்கரையில் போதைப்பொருளான கோக்கைன் மர்மமான முறையில் அலைகளில் அடித்து வரப்படுவதால் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கடற்கரைகளை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

அக்டோபர் மாதம் முதல் தற்போதுவரை கடற்கரையில் இருந்து 1,000 கிலோ கோக்கைன் கண்டுபிடிக்கப்பட்டது, செவ்வாயன்று Brittany-யின் மேற்கில் உள்ள Camaret-sur-Mer-ல் ஐந்து கிலோ பார்சல் கிடைத்துள்ளது என்று பொதுநல வழக்கறிஞர் Philippe Astru தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு அலையிலும் கிலோ கணக்கில் கோக்கைன் அடித்து வரப்படுகிறது, ஒரு நாளில் சுமார் 100 கிலோ வரை கரைக்கு வருகிறது.சுங்க அதிகாரிகள் கடரையில் சில கோக்கைன் பொட்டலங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

கடலில் தினமும் கோக்கைன் எப்படி அடித்து வரப்படுகிறது என்பதை கண்டறிய சுமார் 100 புலனாய்வாளர்கள், ஐரோப்பா அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவின் போதைப் பொருள் தடுப்பு அமலாக்கத் துறையினருடன் பணியாற்றி வருகின்றனர் என Astru தெரிவித்துள்ளார்.

கோக்கைன் 83 சதவிகிதத்தில் மிகவும் தூய்மையானதாக இருப்பதால் மிகவும் ஆபத்தானது. பொதுமக்கள் அதை தொட வேண்டாம் என வலியுறுத்தி உள்ளதாகவும், இது தொடர்பாக பொலிஸாருக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரவித்துள்ளார்.

மில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புடைய கோக்கைனை அடைய கடத்தல் கும்பல் முயற்சிசெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதனால், பொலிஸார் கடற்கரைகளை மூடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வரை சுமார் 1,010 கிலோ கடற்கரையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல கோணங்கள் உள்ளன, ஆனால் இயந்திர கோளாறு காரணமாக அல்லது புயலின் போது அவை கடலில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம் என Astru கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்