படுக்கையறையில் பிணமாக கிடந்த மனைவி, உணவில் கலந்திருந்த நச்சுப்பொருள்: பிரான்சில் சோகம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

படுக்கையறையில் மனைவி பேச்சு மூச்சில்லாமல் கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கணவன், பின்னர் உணவில் கலந்திருந்த நச்சுக்காளான்தான் அவரது மரணத்துக்கு காரணம் என தெரியவந்ததால் சோகத்தில் ஆழ்ந்த சம்பவம் பிரான்ஸ் நகரம் ஒன்றில் நடைபெற்றுள்ளது.

மேற்கு பிரான்சிலுள்ள Deux-Sèvres என்ற இடத்தில், படுக்கையறையில் மனைவி பேச்சு மூச்சில்லாமல் கிடப்பதைக் கண்ட கணவர் அவசர உதவிக் குழுவை அழைத்திருக்கிறார்கள்.

விரைந்து வந்த மருத்துவர்கள் அந்த 49 வயது பெண்ணை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

நடந்தது என்னவென்றால், அந்த கணவனும் மனைவியும், அந்த கணவனின் சகோதரியும் காளான் பறிக்கச் சென்றுள்ளார்கள்.

redditchadvertiser

பார்ப்பதற்கு அழகாக, இனிய வாசனையுடன் காளான் ஒன்றைக் கண்ட அவர்கள், அது உண்ணத்தகுந்த காளான் என்று எண்ணி அதைப் பறித்துவந்து சமைத்திருக்கிறார்கள். அந்த காளான் உண்பதற்கும் சுவையான ஒன்று என்பதால் எந்த சந்தேகமுமின்றி அதை சாப்பிட்டிருக்கிறார்கள் மூவரும்.

சாப்பிட்டு நீண்ட நேரம் கழித்து அவர்களுக்கு கடுமையான வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது.

அந்த பெண் இறந்துபோக, அவரைக் காண வந்த மருத்துவர்கள், அவரது கணவரும் கணவரின் சகோதரியும் கூட பாதிப்புக்குள்ளாகியிருப்பதைக் கண்டு, அவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

அவர்கள் சாப்பிட்ட amanita phalloides (அல்லது ‘death cap’) என்ற வகை காளான், சாப்பிட்ட சில மணி நேரத்தில் வயிற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.

சரியான நேரத்துக்கு சிகிச்சையளிக்காவிட்டால், இவ்வகைக் காளான், சாப்பிட்டவருக்கு இதய பிரச்னைகள், நீரிழப்பு, கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை, கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, கணைய வீக்கம் மற்றும் மூளையில் இரத்தக் கசிவு ஆகிய பிரச்னைகளை உருவாக்கும்.

அத்துடன் முறையான சிகிச்சையளிக்காமலே விட்டால், ஆறு முதல் 16 நாட்களுக்குள் மரணமும் ஏற்பட வாய்ப்புண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Immagine di repertorio

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்