தீவிரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் இராணுவத்தினர் தாக்குதல்... பதுங்கு குழிகள் அழிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்

ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் பிரான்ஸ் இராணுவத்தினர் தற்போது புதிய நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ அமைச்சர் Florence Parly வெளியிட்டுள்ள தகவலில், நேற்று வியாழக்கிழமை ஈராக்கின் வடகிழக்கு பிராந்தியத்தில் இந்த தாக்குதலை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் தீவிரவாதிகள் பல்வேறு பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாகவும், பிரான்ஸ் விமான படை பலத்த தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஐந்து தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகளின் தலைவர் al-Baghdadi உயிரிழந்திருந்ததாக அறிவித்திருந்தார்.

இந்த தகவலை பயங்கரவாதிகள் உறுதிப்படுத்தினர். அவர் இறந்ததன் பின்னர் பயங்கரவாதிகளின் பலம் குறைந்துள்ளதாகவும் இராணுவ அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்