பிரான்சில் தனது சொந்த உணவகத்தில் சாப்பிட்ட சமையல் கலை நிபுணருக்கு தண்டனை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் தனது சொந்த உணவகத்தில் சமைத்து சாப்பிட்ட சமையல் கலை நிபுணர் ஒருவருக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

தனது மனைவியுடன் இணைந்து உணவகம் ஒன்றை Gruissan நகரில் நடத்தி வரும் Patrick Coudertக்கு 13,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் நிறுவன உரிமையாளர்களிடமிருந்து சமூக பாதுகாப்புக்காக நிதி திரட்டும் அமைப்பான Urssaf என்ற அமைப்பு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

எதற்காக இந்த அபராதம் என்று கேட்டபோது, ஒருவர் தனது சொந்த உணவகத்தில் உணவருந்துவது அவர் அனுபவிக்கும் ஒரு நன்மையாக கருதப்படும் என்றும், அதனால் அதற்குரிய வரி செலுத்தவேண்டும் என்றும் அந்த வரியாகத்தான் இந்த 13,000 யூரோக்கள் வசூலிக்கப்படுவதாகவும் Patrickக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

thelocal

பிரெஞ்சு சட்டப்படி அனைத்து உணவகங்களும் தங்கள் ஊழியர்களுக்கு கட்டாயம் அவர்கள் வேலை செய்யும் இடத்திலேயே உணவளிக்க வேண்டும்.

ஆனால், Patrick தம்பதியர்கள், தாங்களே சமைத்து தாங்களே சாப்பிட்டதால் அவர்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Patrick தம்பதியர்களின் உணவகத்தில் மட்டுமின்றி, ஏற்கனவே இதேபோல் வேறு சில உணவகங்களிலும் நடந்துள்ளதையடுத்து, இந்த வேடிக்கையான விதியை மாற்றவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்