பிரான்சில் குழுவினரிடையே நடந்த மோதல்... இளைஞன் பரிதாப பலி! பொலிசார் விசாரணை

Report Print Santhan in பிரான்ஸ்
784Shares

பிரான்சில் குழுவினரிடையே நடந்த பயங்கர மோதலில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரான்சின் Bordeaux நகரின் மையப்பகுதியில் உள்ள place Saint-Projet பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இரண்டு குழுக்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளது.

இதனால் அந்த குழுவினர் கத்திகள் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் இருவர் காயமடைந்துள்ளனர். இரவு 10 மணி அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், வீடற்ற இரு நபர்கள் படு மோசமாக காயமடைந்துள்ளனர்.

தவிர, 25 வயதுடைய இளைஞன் ஒருவன் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது.. இதில் குறித்த இளைஞன் சாவடைந்துள்ளான். தவிர 18 வயதுடைய இளைஞன் ஒருவனும் படுகாயமடைந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவ்கிக்கப்பட்டதால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்