பாரிசில் நடந்த நவநாகரீக அணிவகுப்பு.. 45 வயதிலும் தேவதையாக காட்சியளித்த ஐஸ்வர்யா ராய்!

Report Print Kabilan in பிரான்ஸ்
2343Shares

பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்த ‘Paris Fashion Week’ நிகழ்ச்சியில், நடிகை ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த ஆடை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பாரிஸ் நகரில் நடந்த ‘Paris Fashion Week’ நவநாகரீக அணி வகுப்பு நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் முதல் முறையாக அறிமுகமானார்.

45 வயதாகும் ஐஸ்வர்யா, கண்ணை பறிக்கும் வண்ணமயமான ஆடை அணிந்து ஒய்யாரமாக நடைபோட்டது, காண்போரை வெகுவாக கவர்ந்தது.

AP

சர்வதேச ஒப்பனை அலங்கார நிறுவனமான The L'Oreal, Female empowerment-ஐ கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சியை நடத்தியது. கடந்த 18 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் விளம்பர தூதராக ஐஸ்வர்யா ராய் உள்ளார்.

ஆனால், ‘Paris Fashion Week’ நிகழ்ச்சியில் தற்போது தான் அவர் அறிமுகமாகியுள்ளார். ஆஸ்காரைப் போல் மதிப்புமிக்க திரைப்பட விழாவான கேன்ஸிற்கு அழைக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய், இதன்மூலம் இந்தியாவை சர்வதேச மட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Vianney Le Caer/Invision/AP
Getty Images

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்