பிரான்சின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனம் திவாலானது: வேலையை இழக்கும் ஆயிரக்கணக்கானோர்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
460Shares

பிரான்சின் இரண்டாவது மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான Aigle Azur புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க தவறிய நிலையில் திவாலானதாக அறிவித்துள்ளது.

குறித்த அதிரடி முடிவால் ஆயிரக்கணக்கானோர் வேலையை இழப்பது மட்டுமின்றி, அந்த நிறுவன வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த விவகாரத்தில் சிக்கித் தவிப்பதாக தகவலும் வெளியாகியுள்ளது.

பிரான்சின் Aigle Azur விமான சேவையை கடந்த 2018 ஆம் ஆண்டு சுமார் 1.9 மில்லியன் மக்கள் பயன் படுத்தியுள்ளனர்.

ஆனால் தற்போது புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க தவறியதை அடுத்து இந்த மாத துவக்கத்தில் திவாலானதாக அறிவிக்கும் கட்டாயத்திற்கு அந்த நிர்வாகம் தள்ளப்பட்டது.

மட்டுமின்றி அதன் மொத்த விமான சேவையையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான அதன் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Aigle Azur விமான சேவை நிறுவனமானது துவக்கத்தில் பிரான்சில் இருந்து ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவுக்கு மட்டுமே தமது சேவையை வழங்கி வந்தது.

அதன் பின்னர் சீனா, ரஷ்யா, பிரேசில் தொடங்கி சமீப ஆண்டுகளில் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு தமது சேவையை விரிவு படுத்திக் கொண்டது.

Aigle Azur விமான சேவை நிறுவனத்தின் 49 விழுக்காடு பங்குகளை சீனாவின் HNA குழுமம் கைப்பற்றியிருந்தது. தற்போது வேறு எந்த புதிய முதலீடும் அந்த நிறுவனத்தால் ஈர்க்க முடியவில்லை. இதனால் சுமார் 1150 வேலை வாய்ப்பை இழக்கும் நிலைக்கு அந்த நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த நிறுவனத்தால் வேலையை இழக்க நேரிடும் ஊழியர்களுக்கு கூடிய விரைவில் வேறு வேலையை ஏற்படுத்தி தரப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.

பிரான்சில் Aigle Azur விமான சேவை நிறுவனம் மட்டுமல்ல, சமீபத்தில் எக்ஸ்.எல் ஏர்வேஸ் என்ற மிகச் சிறிய விமான சேவை நிறுவனமும் பொருளாதார சிக்கலால் தங்களது பயணச் சீட்டு விற்பனையை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்