பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி மரணம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
705Shares

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த Jacques Chirac, தனது 86ஆவது வயதில் மரணமடைந்துள்ளதாக அவரது மருமகன் தெரிவித்துள்ளார்.

1995 முதல் 2007 வரை பிரான்சை வழி நடத்திய Chirac, இன்று காலை மரணமடைந்ததாக அவரது மருமகன் Frederic Salat-Baroux பிரபல பத்திரிகையாகிய Reutersக்கு பேட்டியளிக்கும்போது தெரிவித்தார்.

தனது அன்பிற்குரியவர்கள் சூழ்ந்திருக்க, இன்று காலை, அவர் அமைதியாக மரணமடைந்ததாக Frederic தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் கீழவையில் நிகழ்ச்சிகளுக்கு நடுவில், அவருக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Chirac பிரான்சில் நீண்ட காலம் ஜனாதிபதியாக இருந்த இரண்டாவது நபராவார். தனக்கு முன் பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த Charles de Gaulleஐத் தொடர்ந்து அவர் பிரான்ஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

அந்த காலகட்டத்தில், Chirac உலக அரங்கில் பிரான்சின் நிலையை உயர்த்த அயராது உழைத்தார்.

தனது பதவி காலத்திற்குப்பின், அவர் நரம்பு மண்டல பிரச்னைகளால் பாடுபட்டார், எனவே அதிகமாக அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை அவரது குடும்பத்தார், அன்பிற்குரியவர்கள் சூழ, அவரது உயிர் பிரிந்துள்ளது.


மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்