14 வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்த மருத்துவ மாணவி .. பக்கத்து வீட்டுக்காரருக்கு கேட்ட சத்தம்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் Saint-Ouen நகரில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், கத்தியால் 14 இடங்களில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமையன்று சென்-செந்தனியின் Saint-Ouenயில், 27 வயதுடைய பெண்ணின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டது.

Audrey எனும் அப்பெண் அப்பகுதியில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலில் மிக மோசமான, ஆக்ரோஷமான வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும், மொத்தமாக 14 வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் குறித்த பெண் மருத்துவக் கல்லூரி மாணவி என்பது தெரிய வந்துள்ளது.

அத்துடன் பொலிசார் நடத்திய விசாரணையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இருந்து காலை 5 மணி வரை, மாணவி இருந்த கட்டிடத்தில் இருந்து இருவர் சண்டையிட்டுக் கொள்ளும் சத்தம் தொடர்ந்து கேட்டதாக பக்கத்து வீட்டுக்காரர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒருவர் தெருவில் ஓடுவதையும் கண்டுள்ளார்.

இந்நிலையில் மாணவியின் கொலை தொடர்பாக, அவரது 32 வயதுடைய முன்னாள் காதலனை பொலிசார் தேடி வருகின்றனர். இந்த ஜோடி சில மாதங்களுக்கு முன் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்