பிரான்சில் சொந்த சகோதரனை சுட்டுகொன்ற ஓய்வுபெற்ற காவல் அதிகாரி!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர், தனது சகோதரனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பிரான்சின் மார்செயின் 14ஆம் வட்டாரத்தில் உள்ளது Spinelli எனும் சிறு நகரம். இங்கு நேற்றைய தினம், 57 வயதுடைய நபர் ஒருவரின் வீட்டுக்கு அவரது சகோதரர் வந்துள்ளார்.

திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால், தனது சகோதரனை குறித்த நபர் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அத்துடன் அவரது 26 வயது மகன் படுகாயமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், காயமடைந்த இளைஞரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணை கொலையாளி இறந்தவரின் சகோதரர் என்பதும், அவர் ஓய்வு காவல்துறை அதிகாரி என்பதும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட பொலிசார், துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரியை Allauch நகரில் வைத்து கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்