வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட RATP ஊழியர்கள்.. 250 கிலோமீற்றர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் இல்-து-பிரான்ஸ் நகரில் இன்று வேலை நிறுத்தம் காரணமாக, சுமார் 250 கிலோ மீற்றர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் இல்-து-பிரான்சுக்குள் போக்குவரத்துக்கள் கணிசமான அளவு பாதிக்கப்பட்டன.

இதற்கு காரணம், ஏழு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது தான்.

கடந்த 2007ஆம் ஆண்டு நிக்கோலா சர்கோஷி ஜனாதிபதியாக இருந்தபோது, RATP ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தத்தை மேற்கொண்டிருந்தனர்.

AFP

அதன் பின்னர் நடைபெறும் மாபெரும் வேலை நிறுத்தம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், காலை 7.30 மணி அளவில் 130 கிலோ மீற்றர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், எதிர்பார்த்ததை விட அதிகமாக 250 கிலோ மீற்றர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது.

குறிப்பாக நெடுஞ்சாலைகளில் A6, A4, A1 மற்றும் A15 ஆகிய சாலைகள் போக்குவரத்து நெரிசலை சந்தித்துள்ளது. அதைத் தொடர்ந்து, இன்று மாலை மீண்டும் அதிகூடிய நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்