பிரான்சில் தன்னுடைய கிராமத்திற்காக கோடிகளை அள்ளிக் கொடுத்த பாட்டி.... உயிரிழந்தும் செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் உயிரிழந்த பாட்டி ஒருவர் 2.4 மில்லியன் மதிப்புள்ள யூரோவை நன்கொடையாக வழங்கியுள்ள சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருவதுடன், அவர் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

பிரான்சின் Yvelines மாவட்டத்தில் உள்ள Juziersசிறிய கிராமம் ஒன்றில், Janine Vins என்னும் மூதாட்டி வசித்து வந்தார்.

இவர் இந்த வருடத்தின் மே மாதம் உயிரிழந்தார். கிராம மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவரும், கிராமத்தை பெரிதும் நேசித்தவரான இவர் இதுவரைக்கும் பல நன்கொடைகளை வாரி வழங்கியிருந்தார்.

இந்நிலையில் அவர் உயிரிழந்ததன் பின் சுமார் 2.4 மில்லியன் யூரோக்கள்(இலங்கை மதிப்பு 47,89,42,372 கோடி ரூபாய்) மதிப்புள்ள சொத்து ஒன்றை அவர் இந்த நகர சபைக்கு வழங்கியுள்ளார்.

இதனால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக rue de la Poste எனும் வீதியின் பெயரை மாற்றி rue Jeannine Vins எனும் பெயரை சூட்டிடப்பட்டுள்ளது.

மேலும் மூதாட்டி, Raoul Follereau Foundation எனும் அமைப்பிற்கு 408,000 யூரோக்கள் நன்கொடை வழங்கியிருந்தார்.

ARC Foundation அமைப்பிற்கு 100,000 யூரோக்கள் நன்கொடையும், சிறு கிராமங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50,000 யூரோக்கள் நன்கொடையும் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்