ஆர்ப்பாட்டத்தில் வெடித்த வன்முறை.. பொலிசாரின் காரை கொளுத்திய மஞ்சள் மேலங்கி போராளிகள்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பல்வேறு நகரங்களில் நேற்று மஞ்சள் மேலங்கி போராட்டம் நடந்த நிலையில், சிலர் பொலிசாரின் வாகனத்தை தீயிட்டு கொளுத்தினர்.

மஞ்சள் மேலங்கி போராளிகள் நேற்றைய தினம் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக Montpellier நகரில் நேற்றைய தினம் 2,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களில் 500 பேர் வரை கறுப்பு உடை அணிந்து வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது சில நிமிடங்களிலேயே வன்முறை வெடித்தது.

பொலிசாருடன் வன்முறையில் ஈடுபட்ட போராளிகள், கட்டைகள் மற்றும் கற்களைக் கொண்டு தாக்கினர்.

உடனே பொலிசாரும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையை அடக்கினர். பின்னர் ஏழு பேர் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், rue Saint-Guilhem வீதியையும், rue Alexandre-Cabanel வீதியையும் இணைக்கும் சந்திப்பில் வன்முறை ஆரம்பித்த சில நிமிடங்களில், பொலிசாரின் கார் ஒன்றை வன்முறையாளர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

இதில் கார் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்