பிரான்சில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தாய்... மகனை கைது செய்த பொலிசார்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் தாயை கொலை செய்த குற்றத்திற்காக 35 வயது நபரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகரான Montfermeil-ல் கடந்த 17-ஆம் திகதி பெண்மணி ஒருவர் உயிருக்கு போராடுவதாக மருத்துகுழுவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் குறித்த பகுதிக்கு, மருத்துவ குழுவினர் மற்றும் பொலிசார் விரைந்துள்ளனர். அப்போது அங்கு 62 வயதுடைய பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

அப்போது உயிரிழந்த பெண்ணின் மகன் அருகில் இருந்துள்ளார். இதனால் பொலிசார் அவரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர்கள், மற்ற தகவல்கள் எதுவும் கூறவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்