வெளிநாட்டில் பிரான்ஸ் நபர்கள் செய்த திருட்டு செயல்... கிடைக்க போகும் தண்டனை என்ன தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

இத்தாலி நாட்டுக்கு சொந்தமான தீவு ஒன்றில் மணல் திருடிய இரண்டு பிரான்ஸ் நாட்டவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடலில் இத்தாலியின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய தீவான Sardinia தீவை, இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் பழமை மாறாமல் அப்படியே வைத்துள்ளனர்.

இந்நிலையில் பிரான்சின் Toulon நகரைச் சேர்ந்த இரண்டு நபர்கள் இத்தீவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.

அப்போது அவர்கள் பயணித்த காரில் மணல் கடத்தப்பட்டுச் செல்வதை பொலிசாருக்கு தகவல் கிடைத்ததால், அவர்களை சோதனையிட்டனர். அப்போது அவர்கள் 14 சாக்குகளில் மணல் நிரப்பியுள்ளனர்.

மொத்தமாக 40 கிலோ எடையுள்ள மணல் திருடப்பட்டிருந்தது. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் குறைந்தது ஆறு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்