பிரான்ஸில் பயங்கர தீ விபத்து... எரிந்து சாம்பலாகிய 74 ஏக்கர் நிலம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் தவறுதலாக தீ பரவியதையடுத்து 74 ஏக்கர் நிலம் எரிந்து சாம்பலாகியுள்ளது.

பிரான்சின் Alpes-de-Haute-Provence மாகாணத்தில் நேற்று சனிக்கிழமை விளைநில பிராந்தியம் ஒன்றில் தீ பரவியது.

இதனால் இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனாஅல் அங்கு 140 வீரர்கள் வாகனம் மூலமாகவும், விமானம் மூலமாகவும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடினர்.

ஆனால் இங்கு வீசிய காற்றின் காரணமாக தீ வேகமாக பரவியது. மொத்தமாக 30 ஹெக்டேயர்கள்(74.1ஏக்கர்) நிலப்பரப்பை தீ எரித்துச் சென்றுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணைகளில் இந்த தீ சம்பவம் ஒரு விபத்து எனவும் எதிர்பாரா விதமாக பரவியுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நண்பகல் 12:40 மணிக்கு பரவிய இந்த தீயினை தீயணைப்பு வீரர்கள் 17:00 மணி அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்