சமூக ஊடகத்தில் சந்தித்த இளைஞர்களுடன் சுற்றுலா சென்ற இளம்பெண்கள்: கூட்டு துஷ்பிரயோகத்தில் முடிந்த சோகம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

சமூக ஊடகம் ஒன்றில் சந்தித்த இளைஞர்களுடன் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்ற நார்வேயைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்களில் ஒருவர், அந்த இளைஞர்களாலேயே கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பிரான்சைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் இணையம் வழியாக நார்வேயைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்களுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்கள்.

அனைவரும் ஸ்பெயினிலுள்ள Benidormஇல் சந்தித்துள்ள நிலையில், அந்த இளைஞர்கள் தங்கியிருந்த சுற்றுலா விடுதிக்கு அந்த இளம்பெண்களும் சென்றுள்ளார்கள்.

இரவில் அந்த பெண்களில் ஒருவர் அங்கிருந்து வெளியேறி விட, ஒரு பெண் மட்டும் அங்கிருந்திருக்கிறார்.

தனியாக சிக்கிய அந்த இளம்பெண்ணை அந்த ஐந்து இளைஞர்களும் சேர்ந்து துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள்.

பின்னர் இரண்டு இளம்பெண்களும் பொலிஸ் நிலையம் சென்று அந்த இளைஞர்கள் மீது புகாரளித்ததாக கூறப்படுகிறது.

பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரில், இரண்டு பெண்கள் அந்த ஐந்து இளைஞர்கள் மீது புகாரளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு பெண் ஏன் வீட்டை விட்டு வெளியேறினார், அவர் தானாக வெளியேறினாரா அல்லது வெளியேற்றப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில், எந்த சமூக ஊடகம் வழியாக அந்த இளைஞர்களை அந்த இளம்பெண்கள் சந்தித்தார்களோ, அதே சமூக ஊடகத்தில் இருக்கும் புகைப்படங்கள் முதலான விவரங்களை பொலிசாரிடம் அவர்கள் அளித்தார்கள்.

அதன் அடிப்படையில் செவ்வாயன்று அதிகாலை 4 மணியளவில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களில் இருவரும், அரை மணி நேரத்திற்குப்பின் மற்ற மூவரும் கைது செய்யப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டு இளைஞர்களில் நால்வர் 19 வயதுடையவர்கள், ஒருவர் 18 வயதுடையவர்.

நேற்று அவர்கள் ஐந்து பேரும் பிரான்ஸ் திரும்ப வேண்டிய நிலையில், செவ்வாயன்று ஸ்பெயின் பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இன்று அவர்கள் Benidorm நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்