பிரான்ஸ் வரும் பிரித்தானியாவின் புதிய பிரதமர்: அலர்ட் ஆன பிரான்ஸ் அதிகாரிகள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
234Shares

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் போரிஸ் ஜான்சன் அடுத்த சில வாரங்களுக்குள் பிரான்சுக்கு வருகை தர இருக்கும் நிலையில், பிரான்ஸ் அதிகாரிகள் அவர் எரிச்சலூட்டிம் வகையில் பேசக்கூடியவர் என்பதால் கவனமாக பேசுமாறு அவரை எச்சரித்துள்ளனர்.

பிரெக்சிட் பேச்சு வார்த்தைகளின்போது, தான் மோசமானவன் என கருதப்படுவதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டிருந்தார் போரிஸ்.

விடுமுறையில் இருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரான்சுக்கு வருமாறு போரிஸ் ஜான்சனுக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

எனவே போரிஸ் ஜான்சன் பேசும் விதத்தை பிரான்ஸ் நன்கு அறிந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரான்சின் ஐரோப்பிய அமைச்சர் Amélie de Montchalin, ஐரோப்பாவின் சக நாட்டினருடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள பாடுபடுமாறு பிரித்தானியாவின் புதிய தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நமது பக்கத்தைப் பொருத்தவரையில், நாம் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

அதன் பொருள் என்னவென்றால், எதிர் பக்கத்தில் இருப்பவர் எப்படி நடந்து கொள்வார் என்பதை கணித்து ஒரு நல்ல உறவை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்றார் அவர்.

இமானுவல் மேக்ரானும் போரிஸ் ஜான்சனும் எப்போது சந்திப்பார்கள் என்பது சரியாக தெரியவில்லை.

ஆகஸ்டு மாதம் 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை பிரான்சில் நடைபெறும் வளர்ந்த நாடுகளுக்கான G7 கூட்டங்களில் பிரித்தானியாவின் புதிய பிரதமர் கலந்து கொள்ள வேண்டியுள்ளது.

எப்படியானாலும், நாம் அவருடன் பணியாற்ற விரும்புகிறோம், பணியாற்ற வேண்டும் என்கிறார் பிரான்சின் ஐரோப்பிய அமைச்சர் Amélie de Montchalin.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்