நடுவானில் விமானங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. பிரித்தானியர்கள் பலி

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சின் தெற்கில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒரு விமானி உட்பட இரண்டு பிரித்தானியர்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்தாலியுடன் ஆல்பைன் எல்லையில் உள்ள உயரமான மலையான மடாலேனா பாஸ் வழியாக புதன்கிழமை மதியம் 12.45 மணியளவில் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Val d’Oronaye கிராமத்திற்கு அருகே நடந்த இந்த விபத்தில் மூன்று பேர் சிக்கியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து வெளியான புகைப்படத்தில், ஒரு மரத்தில் மோதிய விமானத்தின் சிதைந்த சிதைவை காணப்படுகிறது. விபத்தில் ஆண்ட்ரூ பக் என்ற விமானியும், 18 வயது இளைஞரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது விமானத்தின் விமானியும் பிரித்தானியர் என கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவர் சமர்த்தியமாக அருகில் விமானத்தை தரையிறக்கியதாகவும், இன்னும் உயிருடன் இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் இருந்து தப்பித்த விமானி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக கருதப்படுகிறது. இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு விமானங்களும் அருகிலுள்ள பார்சிலோனெட் செயிண்ட்-போன்ஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளன.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் மீட்பு ஹெலிகாப்டர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன, விபத்து ஏற்பட்டதிற்கான காரணம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்