பிரித்தானியாவுக்குச் செல்ல முயன்ற 11 பேர் அதிரடி கைது

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்ஸின் கலே நகரில் இருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற பதினோரு பேர் உரிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லைப்பிராந்தியமான கலே நகரில் இருந்து ஆங்கிலக்கால்வாய் ஊடாக சிறு படகு மூலம் பிரித்தானியாவுக்குச் செல்ல முயன்ற 11 அகதிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான இந்த பயணம் மிக ஆபத்தான முறையில், சிறிய படகு ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக, அவர்களை மீட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதனன்று காலை உள்ளூர் நேரப்படி 7:30 மணிக்கு அவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

ஹெலிகொப்டர் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்ட கடற்படை ரோந்துப்படையினர் காலை 8:50 மணிக்கு குறித்த படகை அடையாளம் கண்டுகொண்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் 10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளனர். படகில், இரண்டு சிறுவர்கள், ஒரு பெண் உட்பட மொத்தம் 11 பேர் இருந்தனர் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்