பிரெஞ்சு இளம்பெண்கள் மேலாடையின்றி சூரியக்குளியல் எடுப்பது குறைந்து வருவது ஏன்?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மேலாடையின்றி சூரியக்குளியல் போடும் பழக்கம் பிரான்ஸ் நாட்டு இளம்பெண்களிடையே குறைந்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அந்த ஆய்வு, இக்கால இளம்பெண்கள் உடலை மறைத்துக் கொள்வதற்கான பல்வேறு காரணங்களையும் சுட்டிக் காட்டியுள்ளது.

பிரான்சின் மதிப்பிற்குரிய ஆய்வு அமைப்பான Ifop மேற்கொண்டுள்ள இந்த ஆய்வு, மேலாடையின்றி திரிவது தற்கால நாகரீகம் அல்ல என இளம்பெண்கள் கருதுவதாக தெரிவிகிறது.

பிரான்சில் 50 வயதுக்கு கீழுள்ள பிரெஞ்சுப் பெண்களில், 19 சதவிகிதத்தினர் மட்டுமே ரெகுலராக மேலாடையின்றி சூரியக்குளியல் போடும் நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த எண்ணிககை 29சதவிகிதமாக இருந்ததோடு, 1984இல் 43 சதவிகித பெண்கள் இந்த வழக்கத்தை மேற்கொண்டதகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இடுப்பில் மட்டும் ஒரு சிறு ஆடையுடன் சூரியக்குளியல் போடும் வழக்கம் அதிரடியாக குறைந்து வருவதை எங்கள் ஆய்வு உறுதி செய்துள்ளது என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட அமைப்பைச் சேர்ந்தவரான François Kraus.

இந்த எண்ணிக்கை குறைவதற்கு உடல் நலம் மீதான அக்கறையும் ஒரு காரணம் என்றாலும், அது மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது.

25 வயதுக்கு கீழுள்ள இளம்பெண்களில் 51 சதவிகிதத்தினர், ஆண்கள் தங்களை ரசித்து பார்ப்பதாலும், மற்றவர்கள் தங்களை வார்த்தை, உடல் மற்றும் பாலியல் ரீதியாக தாக்கலாம் என அஞ்சுவதாலும் இத்தகைய சூரியக் குளியலை தவிர்க்கிறார்கள்.

சிலர் தங்கள் உடல் அழகு குறித்து மற்றவர்கள் எதிர்மறையாக விமர்சிப்பார்கள் என்பதற்கு பயந்து உடலை மறைத்துக் கொள்கிறார்களாம்.

பிரபல நாளிதழ் ஒன்றில் ஆராய்ச்சியாளராக இருக்கும் Janine Mossuz-Lavau என்ற பெண், பிரான்ஸ் இளம்பெண்கள் ஏன் தங்கள் உடலை மறைத்துக் கொள்கிறார்கள் என்பதற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளார்.

1960, 70களில் பெண்கள் தாங்கள் பாலின அடக்குமுறையிலிருந்து விடுபட்டதைக் காட்டுவதற்காக மேலாடையின்றி கடற்கரைக்கு போனார்கள் என்கிறார் அவர்.

இந்தக் கால பெண்களைப் பொருத்தவரையில், தாங்கள் ஏற்கனவே சுதந்திரப்பறவைகளாகத்தான் இருப்பதாக அவர்கள் கருதுவதாகவும் அதை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என்றும் கூறுகிறார் Janine.

பல ஆய்வுகளில் மட்டுமல்ல, நானே நீச்சல் குளங்களில் பார்த்திருக்கிறேன், இந்தக் கால இளம்பெண்கள் அதிலும் பதின்ம வயதினர் தங்கள் உடல்களை வெளியே காட்ட விரும்புவதில்லை.

எனவே, சில நேரங்களில் மார்பிலிருந்து தொடை வரை மறைக்கும் ஒற்றை நீச்சல் உடையைக் கூட அவர்கள் அணிகிறார்கள் என்கிறார் Janine.

இந்த ஆய்வை வெளியிட்ட பத்திரிகை, இந்த ஆய்வின் முக்கிய நோக்கம், மக்கள் என்ன நினைத்தாலும் சரி, பிரான்ஸ் நாட்டு பெண்கள் தங்கள் அயலகத்தாரை விட அதிக அடக்கமானவர்கள் என்பதை உணர்த்துவதுதான் என்கிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்