இல்-து-பிரான்ஸ் உட்பட 80 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! காரணம் இதுதான்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் கடுமையான வெப்பம் நிலவுவதால், இல்-து-பிரான்ஸ் உட்பட 80 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் வானிலை ஆய்வு மையம், அங்கு நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக 80 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தலைநகர் பிரான்ஸ் உட்பட இல்-து-பிரான்சின் எட்டு மாவட்டங்களும் இதில் அடங்கும். பல மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 1.5 லிட்டர் தண்ணீர் பருகுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த 80 மாவட்டங்களில் Ain, Aisne, Allier, Alpes-Maritimes, Calvados, Cher, Doubs, Eure, Loir-et-Cher, Saone-et-Loire ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.

மேலும் பாரிஸ் மற்றும் அதன் புறநகர்களான Seine-Maritime, Seine-et-Marne, Yuelines, Essonne, Val-d'Oise ஆகிய நகர்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்