பிரான்சில் அடித்துக் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி! பல்வேறு நபர்கள் கைது

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் Toulouseயில் உள்ள இரவு விடுதி ஒன்றில், காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Toulouseயில் உள்ள Sesquieres எனும் சிறிய நகரில் இரவு விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியின் வாசலில் வைத்து, 35 வயதுடைய காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார்.

ஆனால், அவர் சீருடையில் இல்லாமல் சாதாரண உடை அணிந்திருந்தார். பல்வேறு நபர்கள் அவரை கீழே தள்ளி, தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

காவல்துறை அதிகாரி தாக்கப்படுவது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பலத்த தாக்குதலுக்கு உள்ளான குறித்த காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் பல்வேறு நபர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers