பிரான்சில் நடந்த துப்பாக்கிச் சூடு... ஒருவர் சம்பவ இடத்திலே பரிதாப பலி

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

தலைநகர் பாரிசில் 10-ஆம் வட்டாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் ஆயுதமேந்திய ஒருவர் நாத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் உயிரிழந்த நபர் குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை, அதே சமயம் சம்பவம் நடந்த இடத்தில் கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers