புனித நூலை மேற்கோள் காட்டி யூத பெண்ணை கொலை செய்த நபர்: வித்தியாசமான தீர்ப்பளித்த நீதிபதி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

யூத இன பெண் ஒருவரை குரான் வரிகளை மேற்கோள் காட்டி சித்திரவதை செய்த ஒரு புலம்பெயர்ந்தவர், பின்னர் அவரை மூன்றாவது மாடியிலிருந்து வீசி கொலை செய்த வழக்கில், அவரது குற்றச் செயல்களுக்கு அவர் பொறுப்பல்ல என பிரெஞ்சு நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார்.

மாலியைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவரான Kobili Traore (29), Sarah Halimi என்னும் யூத இன பெண்ணை, பாரீஸிலுள்ள அவரது அடுக்கு மாடிக் குடியிருப்பிலேயே பல மணி நேரம் அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாகவும், அவரை சித்திரவதை செய்யும்போது குரான் வரிகளை மேற்கோள் காட்டியதாகவும் கருதப்படுகிறது.

பின்னர் அந்த நபர், 65 வயதான மூன்று குழந்தைகளுக்கு தாயான Sarahவை அவரது வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து வீசும்போது சைத்தானைக் கொன்று விட்டேன் என்று கத்தியிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட Kobili நாளொன்றிற்கு 15 முறை கஞ்சா புகைப்பவர் என தெரியவந்தது.

அதனால் அவரது மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதை மன நல மருத்துவர்கள் கண்டறிந்தார்கள்.

முதலில் அவரது கஞ்சா பழக்கம் அவரது முடிவெடுக்கும் திறனை பாதித்திருக்கும் என கருதப்பட்டாலும், அவர் மொத்த கட்டுப்பாட்டையும் இழக்கவில்லை என 2017இல் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் 2018இல் கஞ்சாவினால் ஏற்படும் மாயத்தோற்றங்களால் நிகழும் மோசமான விளைவுகள் குறித்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் என்று பிரெஞ்சு நீதிபதி ஒருவர் கூறியுள்ளார்.

அதாவது கஞ்சா புகைத்திருப்பதால், அவரது குற்றங்களுக்கு அவர் பொறுப்பாக இல்லாமலிருக்க வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்சிலுள்ள யூத நிறுவனங்களின் பிரதிநிதித்துவ கவுன்சிலின் தலைவரான Francis Khalifat, இந்த தீர்ப்பு தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்றும், ஆனால் அதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளதோடு, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தான் கொலை செய்ததாக Kobili ஒப்புக்கொண்டாலும், மன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ ரீதியாக விசாரணைக்கு உட்பட தகுதியற்றவர் என மருத்துவர்களால் முடிவு செய்யப்பட்டபின், அவர் குற்றவாளி என தீர்க்கப்படவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்