உலக தலைவர்களை பிரமிக்க வைத்த பறக்கும் மனிதன்: பாரீஸ் விழாவில் அசத்தல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸில் நடைபெற்ற பாஸ்டில் தின பேரணியின்போது கூடியிருந்த உலக தலைவர்கள் முன் வானில் பறந்து அசத்தினார் ஒருவர்.

பாரீஸில் நேற்று நடந்த பாஸ்டில் தின பேரணியின்போது கையில் துப்பாக்கியுடன் சூப்பர் ஹீரோ போல ஒருவர் வானில் பறந்ததைக் கண்டு கூடியிருந்த மக்கள் ஆச்சரியத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

கூடியிருந்தவர்களில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் உட்பட பல தலைவர்களும் அடங்குவர்.

பறக்கும் வீரர் என அழைக்கப்படும் அந்த நபர் மணிக்கு 118 மைல் வேகத்தில் பறக்கும் தனது Flyboard Air என்னும் குட்டி இயந்திரத்தில் நின்றபடி பறந்து அசத்தினார்.

பின்னர் இலகுவாக தரையிறங்கிய Franky Zapata (40) என்னும் அந்த பறக்கும் மனிதர், தனது இயந்திரத்தை பிரான்ஸ் ராணுவத்திற்கு விற்க இருக்கிறார்.

அங்கு கூடியிருந்த தலைவர்களுடன் ஒருவராக அமர்ந்திருந்த பிரான்சுக்கான பிரித்தானிய தூதர் Lord Edward Llewellyn, தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பறக்கும் வீரர்! இன்று காலை பாரீஸில் பாஸ்டில் தின பேரணியின்போது ஒரு ராணுவ கண்டுபிடிப்பின் செயல் முறை விளக்கம், என வியந்து ட்வீட் செய்திருந்தார்.

பிரன்சின் ராணுவ அமைச்சரான Florence Parly, இந்த இயந்திரத்தை பொருட்களை கொண்டு செல்வதற்கோ அல்லது தாக்குவதற்கோ கூட ஒரு தளமாக பயன்படுத்தலாம் என்றார். இந்த இயந்திரத்தை Franky Zapata தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள கேரேஜில் வைத்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த Flyboard Air, மணிக்கு 190 கிலோமீற்றர் அதாவது 118 மைல் வேகத்தில் செல்லக்கூடியது என்பதுடன், வானில் 10 நிமிடங்களுக்கு தொடர்ந்து பறக்கக்கூடியதும் ஆகும்.


மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers