பிரான்ஸில் முன்னாள் கணவனால் 4 பிள்ளைகளின் தாயாருக்கு ஏற்பட்ட துயரம்!

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
175Shares

பிரான்ஸில் நான்கு பிள்ளைகளின் தாயார் ஒருவரை அவரின் முன்னாள் கணவர் கத்தியால் பலமாக தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தால் குறித்த பெண்மணி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் Val-d'Oise பகுதியில் இடம்பெற்றதாக தெரிய வந்துள்ளது. Margency நகரில் வசிக்கும் 35 வயதுடைய பெண்மணியே தாக்குதலுக்கு இரையாகியுள்ளார்.

கத்தியால் அவரது கழுத்தை தாக்கியுள்ளார். அப்பெண்ணின் முன்னாள் கணவரே இத்தாக்குதலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அக்கம் பக்கத்தில் வசிக்கும் பலர், அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு காவல்துறையினரை அழைத்து தகவலை தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். குறித்த பெண் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது உயிருக்கு போராடும் நிலையில் அப்பெண் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய 28 வயதுடைய நபர் ஒருவரை Enghien-les-Bains நகரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பெண்மணி 3 இல் இருந்து 8 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளின் தாயார் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்