அமெரிக்கா-ஈரான் இடையே சமாதானப் போக்கை ஏற்படுத்தும் முயற்சியில் மேக்ரான்

Report Print Kabilan in பிரான்ஸ்

அமெரிக்கா மற்றும் ஈரானை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முயற்சியில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மேக்ரான் இறங்கியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிகளை ஈரான் மீறியதாக புகார் எழுந்தது. இதனால் ஈரானுக்கு, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கிடையில், எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலும் இந்த மோதலை வலுவடையச் செய்ததால் போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், அமெரிக்கா-ஈரான் நாடுகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முயற்சியில் பிரான்ஸ் இறங்கியுள்ளது.

Eric Feferberg/AFP/Getty Images

இந்த பேச்சுவார்த்தை வரும் 15ஆம் திகதி நடைபெறலாம் என்று கூறப்படும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மேக்ரான் மற்றும் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி ஆகியோருடன் சமாதான முயற்சி குறித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும், இதுதொடர்பாக விரிவான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச அணுசக்தி முகமை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers