பொலிஸ் வேடமணிந்து கொள்ளை.. இல்-து-பிரான்சில் அதிகரிக்கும் சம்பவங்கள்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸின் இல்-து-பிரான்ஸ் நகரில் காவல்துறையினர் மற்றும் குழாய் திருத்துனர்கள் வேடமணிந்து இடம்பெறும் கொள்ளை சம்பவங்கள் மிக மிக கணிசமாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கடந்த 2015ஆம் ஆண்டு 300 கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றன. கடந்த 2018ஆம் ஆண்டில் நாடு முழுவதும் இதுபோன்று 8,800 வழக்குகள் பதிவானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாரிஸுக்குள் அதிகம் பாதிக்கப்படும் வட்டாரங்களாக 16 மற்றும் 17 ஆகிய வட்டாரங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இல்-து-பிரான்ஸுக்குள் வசிக்கும் மக்கள், அதிலும் குறிப்பாக வயதானவர்கள் தான் இந்த கொள்ளை சம்பவங்களில் பாதிக்கப்படுவதால், அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பொலிசார் போன்று வேடமணிந்தும், குழாய் திருத்துனர்கள் வேடமணிந்தும் முதியவர்களை தாக்குவதாக தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, முதலாம் வட்டார காவல்துறை ஆணையாளர் Vincent Annereau இதுதொடர்பாக கூறுகையில்,

‘கொள்ளையர்கள் வயதானவர்களை குறி வைத்து இந்த கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றுகின்றனர். 70 தொடக்கம் 90 வரையான வயதுடையவர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

நீங்களாக அழைக்காமல், தாமாக வரும் எவரையும், என்ன காரணங்கள் தெரிவித்தாலும் உங்கள் வீட்டு கதவினை திறக்க வேண்டாம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers