பிரான்சில் சுற்றுலா பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு... என்ன காரணம்? வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிசிற்குள் வரும் சுற்றுலா பேருந்துகளுக்கு இனிமேல் அனுமதி இல்லை என்று பாரிஸ் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் பாரிசிற்குள் அதிக அளவிலான சுற்றுலா பேருந்துகள் நுழைவதால், சுற்றுச் சூழல் மாசடைகிறது.

இதனால் தரிப்பிட பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது.

இதன் காரணமாக பரிஸ் நகர மண்டபம் சுற்றுலா பேருந்துகளை மட்டுப்படுத்துப்படுத்துவது தொடர்பாக திட்டங்கள் வகுத்து வருவதாக பரிஸ் துணை முதல்வர் Emmanuel Gregoire தெரிவித்துள்ளார்.

மேலும் பாரிசுக்குள் சுற்றுலாப்பயணிகளுக்கான தின பயணச்சிட்டையும், பொது போக்குவரத்துக்களை பயன்படுத்த ஊக்குவிக்க திட்டங்களை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சுற்றுலா பேருந்துகளை பாரிசுக்கு வெளியே நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி தொட்ர்பாக Emmanuel Gregoire ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்