பிரான்சில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு: எதனால் இந்த அதிகரிப்பு?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் சமீபத்தில்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ஆகஸ்டு மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகஸ்டு மாத துவக்கத்தில் மின் கட்டணம் 1.2 சதவிகிதம் அதிகரிக்க உள்ளது. இதற்கு முன் ஜூன் மாதத்தில்தான் மின் கட்டணம் 5.9 சதவிகிதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படியிருக்க குறுகிய கால இடைவெளிக்குள் ஏன் இரண்டு கட்டண உயர்வுகள்? இப்படி சொல்லலாம், அதாவது மஞ்சள் மேலாடைக் காரர்கள்தான் இந்த கட்டண உயர்வுக்கு காரணம் என்றோ, அல்லது அவர்களது கோரிக்கைக்கு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் ரெஸ்பான்ஸ் என்றோ சொல்லலாம்.

உண்மையில் இந்த கட்டண உயர்வு, பிப்ரவரி மாதம் 1ஆம் திகதிக்கு திட்டமிடப்பட்டிருந்தது, அதாவது சரியாக மஞ்சள் மேலாடை போராட்டங்களின் நடுவில்...

ஆனால் அப்போது போராட்டக்காரர்களை தாஜா பண்ணும் விதமாக அரசு அந்த கட்டண உயர்வை தள்ளிப்போட்டது.

இப்போது அறிவிக்கப்பட உள்ள இந்த கட்டண உயர்வால் வீட்டை வெப்பப்படுத்த மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு, சராசரியாக வீடொன்றிற்கு 18 யூரோக்கள் செலவு அதிகரிக்கும்.

ஆனால் முந்தைய கட்டண உயர்வால் 85 யூரோக்கள் செலவு அதிகரித்தது. சரி, மொத்தத்தில் ஏன் மின் கட்டண உயர்வு?

வழக்கம்போலவே வரி உயர்வுதான் முதன்மை காரணம்! என்றாலும், வேறு பல காரணங்களும் உள்ளன...

மின்சாரம் வாங்கும் செலவு, மற்றும் மொத்தமாக சந்தையிலிருந்து வாங்கும் விலை, இவை நிலையாக இல்லாமல், மாறிக்கொண்டே இருக்கும் கட்டணங்களாகும்.

ஆனால் பிரான்ஸ் அரசு 2020 வாக்கில் மின் கட்டணத்தை நிலைப்படுத்த இருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் François de Rugy தெரிவித்துள்ளது குடிமக்களுக்கு மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தியாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்