2019ஆம் ஆண்டின் தலைசிறந்த உணவகம் எங்குள்ளது தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சிலுள்ள உணவகம் ஒன்று 2019ஆம் ஆண்டின் தலைசிறந்த உணவகம் என்ற பெயரை பெற்றுள்ளது.

பிரெஞ்சு ரிவேரா பகுதியில், இத்தாலிய எல்லை மற்றும் Ligurian கடலுக்கு நெருக்கமாக அமைந்துள்ள ஒரு உணவகத்துக்குத்தான் இந்த பெருமை கிடைத்துள்ளது. Mirazur என்ற பெயருடைய அந்த உணவகம் செப் Mauro Colagreco என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது.

பிரித்தானிய பத்திரிகையான Restaurant, சிங்கப்பூரில் நடத்திய விருதுகள் வழங்கும் விழா ஒன்றில் 2019ஆம் ஆண்டின் தலைசிறந்த உணவகம் என்ற விருதை வழங்கியுள்ள நிலையில், இன்றைய திகதிக்கு Mirazurதான் உலகின் தலைசிறந்த உணவகம் ஆகும்.

உலகின் தலைசிறந்த உணவகங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது Copenhagenஇல் அமைந்திருக்கும் Noma என்ற உணவகம்.

மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது ஸ்பெயினிலுள்ள Asador Etxebarri.

நான்காவது இடத்தைப் பிடித்துள்ள பாங்காகிலுள்ள Gagganஇன் உரிமையாளர் இந்தியரான ககன் ஆனந்த்.

இந்த பட்டியலில் 27 மற்றும் 33 ஆவது இடங்களில் முறையே The Clove Club (London, UK) மற்றும் Lyle's (London, UK) என்னும் இரண்டு பிரித்தானிய உணவகங்கள் இடம்பிடித்துள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers