பிரான்சில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் சாதித்த ஈழத்தமிழர்கள்

Report Print Dias Dias in பிரான்ஸ்

நோர்மண்டி (Normandie) பிராந்தியத்தின் Falaise நகர பட்மின்ரன் அமைப்பினால் இவ் உலகக் கிண்ண போட்டிகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இதில் பிரான்ஸ் நாட்டு வீரர்களுடன் பெல்ஜியம் ஜெர்மனி இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்தும் வீரர்கள் பங்காற்றியிருந்தார்கள்.

இப்போட்டியில் அனைத்து இன மக்களும் பங்குபெற்றியிருந்தார்கள். குறிப்பாக நமது தமிழ் இன விளையாட்டு வீரர்களும் இடம் பெற்று மிகவும் சிறந்த முறையில் விளையாடி வெற்றி கிண்ணங்களையும் தமதாக்கியிருந்தார்கள்.

இவர்களது திறமையை இனம் கண்டு கொண்ட பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்று அவர்களுடன் ஓர் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன் அந்த நேர்காணலினை வெளியிட்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் WTBF ஒவ்வொரு வருடமும் உலகக்கிண்ணப் போட்டிகள் நடத்துவது பற்றி நம்மவர்கள் குறிப்பிட்ட கொண்டதையும் இவர்களும் தமது பதிப்பில் சிறப்பாக கோடிட்டு காட்டியிருந்தார்கள்.

இவ் உலகக்கிண்ணப் போட்டியில் WTBF இன் உலகக்கிண்ணப் போட்டிகளின் வெற்றியாளர்களான சண்முகராஜா தஞ்சீவன் (பிரான்ஸ்), சண்முகராஜா ஆத்துர் (பிரான்ஸ்), சண்முகராஜா கிளேயர் (பிரான்ஸ்) பொன்னம்பலம் துபீசன் (ஜேர்மனி), குலபாலசிங்கம் நிர்மலன் (இங்கிலாந்து) சாம் துஷ்யந்தன் (இங்கிலாந்து) ஆகியோர் தமது பிரிவுகளில் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்கள்.

இவ்வாறான உலகக் கிண்ணப் போட்டிகளில் நமது போட்டியாளர்களும் கலந்து கொள்வது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயம் என்பதுடன், இதற்கு அடித்தளமிட்ட உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் செயற்பாடும் பாராட்டப்பட வேண்டியது.

இந்த வகையில் இனிவரும் காலங்களில் எம்மவர்கள் இன்னும் பல சர்வதேச தர போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்பது வெளிப்படையானதே.

Catogory - Benjamain

SH Benjamin A (Men singles A grade)

Shanmugarajah Arthur 23 /21 21/13 (30 mn) winner

Hillairet Lilian

DH TOP Benjamin A (mens doubles A grade)

JACQUETTE Paul & SHANMUGARAJAH Arthur 21-23 21-12 21-13 (38mn) winner

HILLAIRET Lilian & MATHERN Victor

Catégorie - vétérans

SH TOP B (Men singles B grade)

Sam Thushyanthan 23-25 21- 10 17-21 (53mn) Runner

DELAHAYE Giovanni

DH TOP A (men doubles A grade)

PONNAMPALAM Thupi SHANMUGARAJAH Thanjeevan 19-21 21-14 21-16 (47mn) winners

LOUIS Nicolas RIOU Alexandre

DH TOP B (men doubles B grade)

KULABALASINGHAM Nimalan & SAM Thushyanthan 15-21 21-10 21-17 (54mn) winners

MOREL Jean-Pierre & PITT Guillaume

Mixte TOP A (mixed doubles)

SHANMUGARAJAH Thanjeevan & SAVARY GAGEZ Claire 21-14 23-21 (33mn) Winners

CHENE Yannick & LEGASTELOIS Aline

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers