பிரான்சில் நீச்சல் உடையுடன் போராட்டத்தில் குதித்த பெண்கள்: சுவாரஸ்ய பின்னணி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் தடையை மீறி சில இஸ்லாமிய பெண்கள் நீச்சல் குளத்தில் இறங்கி போராடியதையடுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பிரான்சில் பல நீச்சல் குளங்களில், இஸ்லாமிய பெண்கள் பயன்படுத்தும் முழு உடலையும் மறைக்கும் விதமான பர்கினி என்னும் நீச்சல் உடையை அணிந்து குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடலில் திறந்த காயங்கள் இருந்தால் அவற்றை நீச்சல் குள ஊழியர்கள் பார்க்க முடியாது என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நீந்துவது தங்கள் உரிமை எனக்கோரும் சில இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பெண்கள் ஆங்காங்கு நீச்சல் குளங்களில் தடையை மீறி இறங்கி வருகின்றனர்.

பிரான்ஸ் நகரங்களில் ஒன்றான Grenobleஇல் அமைந்துள்ள The Jean Bron நீச்சல் குளத்திலும் பர்கினி அணிந்து நீந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

'Operation burkini' என்ற பெயரில் இந்த தடையை மீறி இஸ்லாமிய இளம்பெண்கள் சிலர் இந்த நீச்சல் குளத்திலும் இறங்கியுள்ளனர்.

நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பலர் இந்த பெண்களுக்கு கைதட்டி ஆரவாரித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்த அதே நேரத்தில், நீச்சல் குள ஊழியர்கள் பொலிசாரை அழைத்தனர்.

பொலிசார் வந்து அவர்களை குளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

அவர்களுக்கு பொலிசார் 30 பவுண்டுகள் அபராதம் விதித்ததோடு, அவர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பியதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தெரிவிக்கிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers