தேர்வு எழுதுவதற்கு பொலிஸ் படை சூழ வந்த மாணவர்: சுவாரஸ்ய பின்னணி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் பொலிஸ் வாகனத்தில், பொலிசார் படை சூழ தேர்வு எழுத வந்த ஒரு மாணவருக்கு பொலிசார் வாழ்த்துக் கூறி அனுப்பியதைக் கண்ட சக மாணவர்கள் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தனர்.

பிரான்சில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டுமானால், அதற்கு முன் Baccalauréat என்னும் தேர்வை எழுத வேண்டும்.

இந்த தேர்வு ஸ்பெயிலின் நடைமுறையிலுள்ள Selectividad, பிரித்தானியாவில் Advanced Levels மற்றும் ஜேர்மனியில் நடைமுறையிலுள்ள Abitur ஆகிய தேர்வுகளுக்கு சமமாகும்.

Albiயில் வேகமாக காரில் வந்த ஒருவரின் கார் விபத்துக்குள்ளாக, அங்கு விரைந்த பொலிசார், காரில் இருந்த Loic (18) என்பவரைப் பிடித்து அவர் மது அருந்தியுள்ளாரா என சோதித்துள்ளனர்.

இல்லை என்று தெரிந்ததும், அவர் யார் என்று விசாரிக்க, Loic என்னும் அந்த நபர், தான் ஒரு மாணவர் என்றும், Baccalauréat தேர்வை எழுதச் செல்வதாகவும், பேருந்தை தவற விட்டி விட்டதால், தனது தந்தையின் காரை எடுத்துக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மணி 1.20ஆக, தேர்வு ஆரம்பிக்க இன்னும் பத்தே நிமிடங்கள் இருக்க, Christophe என்னும் பொலிஸ் அதிகாரி, உடனே காரில் ஏறுங்கள் என்று கூற, Loic பொலிஸ் காரில் ஏற, பொலிசார் காரை விரட்டினர்.

சரியாக உள்ளூர் நேரப்படி மதியம் 1.28க்கு பொலிஸ் கார் Albiயில் உள்ள தேர்வு நடக்கும் கட்டிடத்திற்குள் நுழைந்தது.

பல மைல் தூரத்திற்கப்பாலிருந்து காரை மிக விரைவாக ஓட்டி வந்த பொலிசார், தேர்வு தொடங்க இரண்டு நிமிடங்கள் இருக்கும் நிலையில் Loicஐ சரியாக கொண்டு சேர்த்ததோடு, பிரான்சிலுள்ள அனைத்து பொலிசாரும், Albi பொலிஸ் நிலையமும் அவருக்கு வாழ்த்துதல் தெரிவிப்பதாக கூறி, அவரை தேர்வெழுத அனுப்பினர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்