பிரான்சில் சிறார்கள் மீது வாகனத்தை மோதவிட்டு கொலை செய்த சாரதி

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சின் Lorient பகுதியில், இரண்டு சிறுவர்கள் மீது வாகனத்தை மோதவிட்டு கொலை செய்து தப்பியோடிய சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளான்.

Morbihan நகரில் உள்ள தங்குமிடம் ஒன்றில் வைத்து செவ்வாய்க்கிழமை குறித்த சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 9 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை Lorient நகரில் உள்ள McDonald's உணவகத்தில் இருந்து வெளியேறிய மூன்று சிறுவர்கள் மீது வாகனத்தை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றிருந்தான்.

இதில் இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தும், 7 வயதுடைய மூன்றாவது சிறுவன் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டான்.

தப்பியோடிய சாரதி காவல்துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வந்தான். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

20 வயதுடைய குறித்த நபர், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Morbihan நகரில் அமைந்துள்ள தங்குமிடம் ஒன்றில் பதுங்கியிருந்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்