பிரான்சில் வீட்டுத்தோட்டத்தில் வெடிகுண்டுகள்! கண்டுபிடித்த சிறுமிகள்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் தங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கும் வெடிகுண்டை கண்டு பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டதால், அதை காவல்துறையில் எடுத்து சென்றுள்ளனர்.

கடந்த ஞாயிற்று கிழமை Trouville-sur-Mer (Calvados) பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுமிகள் தங்கள் வீட்டு தோட்டத்தில் விளையாடியுள்ளனர்.

அப்போது அவர்கள் மண்ணுக்குள் புதைந்திருந்த வெடிகுண்டைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளனர்.

பெற்றோர் வெடி குண்டை கண்டு உறுதி செய்து, பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அன்று 75 ஆவது D-day நினைவு நாள் நிகழ்ச்சி என்பதால், பொலிசாரால் விரைவில் வர முடியவில்லை.

இதனால் பொலிசார் அவர்களிடம் அந்த வெடி குண்டை மணல் நிரப்பியிருந்த வாலி ஒன்றில் போட்டு வைக்கும் படி கூறியுள்ளனர்.

அதன் பின் அங்கு வந்த பொலிசார் வெடி குண்டை எடுத்துச் சென்று செயலிழக்கச் செய்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers