பிரான்சில் பாரிதாபமாக உயிரிழந்த 70 வயது முதியவர்... அஜாக்கிரதையால் நடந்த விபரீதம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் காரை அஜாக்கிரதையாக நிறுத்தியதால், 70 வயது முதியவர் காருக்கும், தூணுக்கும் இடையே சிக்கி பரிதாபமாக சிக்கி இறந்துள்ளார்.

பிரான்சின் Ancy-le-Franc(Yonne) பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் இரவு உள்ளூர் நேரப்படி சரியாக இரவு 21.00 மணியளவில் காரில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது காரை விட்டு இறங்கி வந்த இவரை, திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் இவர் மீது வந்து மோதியதால், அங்கிருந்த தூண் மற்றும் காருக்கிடையே சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர் தன்னுடைய காரின் கை பிரேக்கை போடவில்லை என்பதை அறிந்துள்ளனர்.

இதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்