12,500 ஆடுகளை கொன்று தின்றுள்ள ஓநாய்கள்: அரசு அதிரடி நடவடிக்கை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் ஓநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து, சுமார் 12,500 ஆடுகளை இதுவரை ஓநாய்கள் கொன்று தின்றுள்ளன.

எனவே ஓநாய்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, அவற்றை கொல்ல அரசு அனுமதியளித்துள்ளது.

தற்போது சுமார் 530 ஓநாய்கள் வரை பிரான்ஸ் வனப்பகுதியில் இருக்கலாம் என அரசு கணக்கிட்டுள்ளது.

1930களில் முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஓநாய்கள், 1990களில் இத்தாலியிலிருந்து ஆல்ப்ஸ் மலை வழியாக வரத்தொடங்கியதையடுத்து மீண்டும் தென்பட ஆரம்பித்தன.

தற்போது அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து அவை விவசாயிகளின் ஆடுகளை குறிவைக்க, விவசாயிகள் தங்கள் மந்தைகள் அளவில் குறைவதாக அபயக்குரல் எழுப்பத் தொடங்கினர்.

கடந்த ஆண்டில் மட்டும் நடந்த 3,674 ஓநாய்களால் ஏற்பட்ட தாக்குதல்களில் சுமார் 12,500 கால்நடைகள், குறிப்பாக ஆடுகள் கொல்லப்பட்டன.

ஓநாய்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக 500 ஓநாய்கள் வரை வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்று 2018இல் பிரான்சில் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது.

ஆனால் அவை ஏராளமாக பெருகி வருவதையடுத்து, இனி ஓநாய்கள் அழிவின் விழிம்பில் இருக்கும் விலங்குகள் என தாங்கள் கருதவில்லை என்று கூறியுள்ளார் வேளாண்மைத்துறை அமைச்சரான Didier Guillaume.

விவசாயிகள் நலன்தான் நமது முன்னுரிமை என்று கூறியுள்ளார் அவர். பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானும், இனி ஆண்டுக்கு 17 முதல் 19 சதவிகிதம் ஓநாய்களைக் கொல்லலாம் என அனுமதியளித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்