இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற தமிழன் ஜெய்சங்கர்... பிரான்சிலிருந்து பறந்து வந்த வாழ்த்து

Report Print Kabilan in பிரான்ஸ்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஜெய்சங்கருக்கு, பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லீ டிரியான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரும் ஓய்வுப்பெற்ற வெளியுறவுச் செயலாலருமான டாக்டர்.ஜெய்சங்கர், நேற்றைய தினம் மீண்டும் வெளியுறவுத்துறைக்கு வந்தார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் லீ டிரியான், டாக்டர்.ஜெய்சங்கருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘என் புதிய சக பணியாளர் டாக்டர்.ஜெய்சங்கருக்கு என் வாழ்த்துக்கள். உங்களை வரவிருக்கும் ஜி7 மாநாட்டில் நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன்.

பிரான்ஸ், இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவு ஆழமாக வேண்டும். பன்முக தன்மையை புதுப்பிக்கவும், பாதுகாப்பான நிலையான உலகிற்காகவும் இதனை நான் எதிர்பார்க்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

REUTERS/Carlo Allegri

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers