அகதிகள் பிரச்சினை என்பது பிரான்சில் மறக்கப்பட்ட விடயமாகிவிட்டது: பிரெக்சிட் முக்கிய செய்தியாகி விட்டது!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சை பொருத்தவரையில் அகதிகள் பிரச்சினை என்பது மறக்கப்பட்ட ஒரு விடயமாகிவிட்டது என்று பிரித்தானியாவை மையமாக கொண்டு பிரான்சில் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு மோசமான சூழல்களிலிருந்து புலம்பெயர்ந்து வரும் மக்களின் கதைகளை கேட்பதற்கு கடினமாக உள்ளது என்று கூறும் தொண்டு நிறுவனம் ஒன்றின் கள மேலாளரான Josh Hallam, அவர்களுக்கு உதவ ஆலோசகர்கள் தேவைப்படுகிறார்கள், ஆனால் எங்களிடம் குறைவான ஆலோசகர்களே உள்ளனர் என்கிறார்.

இது அகதிகள் பிரச்சினை என்று அங்கீகரிக்கப்பட்டால் அதிக உதவி கிடைக்கலாம், ஆனால் இங்கு பெரிய தொண்டு நிறுவனங்களே இல்லை என்று கூறும் அவர், அகதிகள் பிரச்சினை என்பதே மறக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது என்கிறார்.

அகதிகளின் தலைவிதி குறித்து ஊடகங்களுக்கு ஆர்வம் போய்விட்டது, இப்போது எல்லோரும் பிரெக்சிட்டைக் குறித்துதான் பேசுகிறார்கள் என்கிறார்.

பிரான்சின் கலாயிஸ் உட்பட பல பகுதிகளில் தங்கும் அகதிகள், தொடர்ந்து தாங்கள் தங்கும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.

பொலிசார் வரும்போது, இது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கூட நடப்பதாக சிலர் கூறுகிறார்கள்.

அவர்கள் அகதிகளின் கூடாரங்களையும், தூங்க உதவும் பைகளையும் பறிமுதல் செய்து விட்டு அங்கிருந்து வெளியேறச் சொல்கிறார்கள்.

எனவே மீண்டும் மீண்டும் கூடாரங்களையும், தூங்க உதவும் பைகளையும் நாங்கள் வழங்க வேண்டியுள்ளது என்று கூறும் Josh, தங்களுக்கு உதவி மட்டுமல்ல உதவியாளர்களும் தேவை என்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்