எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதால், கணவனை பரிகொடுத்த பிரான்ஸைச் சேர்ந்த பெண் ஒருவர் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் கடந்த மார்ச் மாதம் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து புறப்பட்டது.
அப்போது புறப்பட்ட சில நிமிடங்களிலே விபத்தில் சிக்கியதால், விமானத்தின் உள்ளே இருந்த விமான ஊழியர்கள், பயணிகள் என 157 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்நிலையில் இந்த விபத்தில் கணவரை பறிகொடுத்த பிரான்சைச் சேர்ந்த பெண்
இந்த சம்பவத்தில் 157 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் ஒருவர், 276 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு போயிங் நிறுவத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
போயிங் நிறுவனம் மேக்ஸ் விமான மென்பொருளில் பிரச்சனை இருப்பதை ஒப்புக் கொண்டதால் தனது கணவரின் மரணத்திற்கு இழப்பீடு கேட்டுள்ளதாக அந்த பெண்மணி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.