காதலியை சரமாரியாக தாக்கிய சிறைக்கைதி: காதலனை பார்க்க வந்தபோது விபரீதம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

சிறையில் இருக்கும் காதலனை பார்க்க வந்த பெண்ணை, அவரது காதலன் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Seine-et-Marne இல் உள்ள Réau சிறைச்சாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சனிக்கிழமை நண்பகலில், பார்வையாளர்கள் நேரத்தின் போது சிறையில் இருக்கும் காதலனை பார்ப்பதற்காக சிறைக்குச் சென்றுள்ளார் குறித்த பெண்.

சில நிமிடங்களில் அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து காவல்துறையினர் அப்பெண்ணை காப்பாற்றியுள்ளனர். காதலன் அப்பெண்ணின் தலை மீது பாய்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

படுகாயமடைந்த அப்பெண் உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அப்பெண் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இட்ந்த விவகாரம் தொடர்பாக நடந்த விசாரணையில் அப்பெண் தன்னை ஏமாற்றியதாக சிறைக்கைதி காவல்துறையினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers