பிரான்சில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர்களின் தூண்டிலில் சிக்கிய மர்ம பெட்டகம்..என்ன தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபருக்கு விசித்திரமான பெட்டகம் கிடைத்துள்ளதால், அதைப் பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைநகர் பாரிசில் கடந்த திங்கட் கிழமை இரவு Saint-Martin-du-Tertre பகுதியில் இருக்கும் Carnelle மூன்று பேர் இணைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அவர்களுடைய ஒருவரின் தூண்டிலில் எதிர்பாரா விதமாக பாதுகாப்பு பெட்டகத்தின் பகுதி ஒன்று சிக்கியுள்ளது. இதனால் அவர்கள் இது குறித்து உடனடியாக ஜோந்தாமினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு விரைந்த ஜோந்தாமினர் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த பாதுகாப்பு பெட்டகத்தின் பூர்வீகம் எதுவும் அறியமுடியவில்லை எனவும், இதன் மற்றுமொரு பகுதி குளத்துக்குள் இருக்கலாம் என்பதால், அதை மீட்டால் மட்டுமே இதன் மர்மம் விலகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers