பிரான்சில் மஞ்சள் ஆடை போராளியின் தலையில் தாக்கிய பொலிசார்! இரத்தம் வழிந்த நிலையில் ஓடிய புகைப்படம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் மஞ்சள் ஆடை போராளி ஒருவரை பொலிசார் பலமாக தாக்கியதால், அவர் இரத்த வழிந்த நிலையில் ஓடும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரான்சின் Besançon பகுதியில் மஞ்சள் ஆடை போராளிகளை பொலிசார் துரத்திச் சென்ற போது,Emma Audrey என்ற நபரை பொலிசார் கையில் இருந்த குச்சியால் அவரின் தலையில் தாக்கியதால், கண்களுக்கு மேல் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்த நிலையில் ஓடினார்.

அதன் பின் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த காட்சியை அங்கிருக்கும் உள்ளூர் ஊடகத்தின் செய்தியாளர் வீடியோவாக பிடிக்க தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த தாக்குதல் குறித்து Emma Audrey கூறுகையில், நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. நான் காவல்துறையினருக்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...