ஏப்ரல் மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் மாற்றங்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

வழக்கம்போலவே ஒரு புதிய மாதத்தின் துவக்கம், பிரான்சில் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் சில சிறிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம்..

மருத்துவம்

Couverture maladie universelle complémentaire (CMU-C) மருத்துவக்காப்பீட்டுக்கான அதிகபட்ச வருவாய் வரம்பு பிரான்சில் வசிக்கும் நபர் ஒருவருக்கு, ஆண்டுக்கு 8,951 யூரோக்களாக ஆக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உதவியை அணுகுவதை எளிதாக்கும் வகையில் RSA உதவித்தொகை பெறுவோருக்கு காப்பீடு புதுப்பிப்பு தாமாகவே செய்யப்படும்.

இந்த மாற்றம் 670,000 குடும்பங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பற்களுக்கு கேப் போடுவது உட்பட சில சிகிச்சைகளுக்கான கட்டணம் அதிகரித்துள்ளது.

புற்றுநோய் பாதித்தவர்களுக்கு பயன்படுத்தப்படும் சில ’விக்’குகளுக்கு விலைக்குறைப்பு செய்யப்படும் அல்லது மொத்த கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

வாகன உதிரி பாகங்கள்

ஏப்ரல் ஒன்று முதல் வாகனங்களில் ரிப்பேரான பாகங்களுக்கு புதிய பாகங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக ஏற்கனவே உபயோகிக்கப்பட்ட பாகங்களையும் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பதை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மெக்கானிக் ஷாப்கள் தெரியப்படுத்த வேண்டும்.

பணியிலிருக்கும்போது விபத்துக்குள்ளாவோருக்கான பயன்கள்

பணியிலிருக்கும்போது விபத்துக்குள்ளாவோர் மற்றும் உயிரிழப்போருக்காக வழங்கப்படும் உதவித்தொகையில் சில குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கான உதவித்தொகையில் மட்டும் 0.3% உயர்த்தப்படுகிறது.

'winter truce' முடிவுக்கு வந்தது

'winter truce' முடிவுக்கு வந்ததையடுத்து வீட்டு வாடகை செலுத்தாதோர், வீட்டை விட்டு வெளியேற்றப்படுதல் மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்பு துண்டிப்பு ஆகிய நடவடிக்கைகள் தொடரும்.

பல்கலைக்கழக மாணவர்கள் விண்ணப்பிக்க காலக்கெடு செப்டம்பரில் துவங்கும் வகுப்புகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 3 ஆகும்.

எரிவாயு கட்டணம்

ஏப்ரலில் எரிவாயு கட்டணம் குறைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமைப்பதற்கு பயன்படுத்தும் எரிவாயு கட்டணம் 0.7 சதவிகிதமும், சமைப்பதற்கும், தண்ணீர் கொதிக்க வைப்பதற்கும் பயன்படுத்தும் எரிவாயு கட்டணம் 1.3 சதவிகிதமும், வீட்டை வெப்பப்படுத்துவதற்கு பயன்படுத்தும் எரிவாயு கட்டணம் 2.2 சதவிகிதமும் குறைகிறது.

மேலும், ஜூன் 2019 வரை எரிவாயு விலை அதிகரிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்