பிரான்ஸ் நாட்டின் தமிழ்ச்சோலை தலைமை பணியகமும் இணைத்து நடத்திய மதிப்பளிப்பும் சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வு

Report Print Dias Dias in பிரான்ஸ்

அனைத்துலக தமிழ் கலை நிறுவகமும் பிரான்ஸ் நாட்டின் தமிழ்ச்சோலை தலைமை பணியகமும் இணைத்து நடாத்திய மதிப்பளிப்பும் சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வும் நேற்று 31 மாலை பிரான்ஸ் சாசலில் அனைத்துலக தமிழ் கலை நிறுவக தலைவர் ஆறுமுகம் செகசோதி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக திருவாட்டி திரிபுரசுந்தரி மேகானந்தம் அவர்களும் . குசன் வில் நகர பிதா உட்பட பிரதி நகர பிதா மற்றும் தமிழ்ச்சோலை தலைமை பணியக பொறுப்பாளர்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் உட்பட தமிழ்ச்சோலை நிருவாகிகள் பெற்றோர்கள் கலை சார்ந்த ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிரான்ஸ் நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை வளர்க்கும் நோக்கத்துடன் தங்களை அர்ப்பணித்து 10வருடம் 15 வருடம் 25 வருடங்களாக சேவை செய்த அனைத்து கலைத்துறை ஆசிரியர்களும் மேடையில் மதிப்பளிக்கும் பட்டு அவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டன.

புதிதாக கலையார்வத்துடன் கற்று பட்டம் பெற்றவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வும் சிறப்பு மலர் வெளியீடும் நடைபெற்றதுடன் அனைத்துலக தமிழ் கலை தேர்வில் ஐரோப்பிய நிலையில் முதல் நிலை புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான சிறப்பு மதிப்பளிக்கும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers