பிரான்ஸ் முழுவதும் 33,700 பேர் போராட்டம்! வெளியான காரணம்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் நேற்றைய தினம் 33,700 மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் மேலாடை போராட்டத்தின் 20வது வார போராட்டம் நேற்று பிரான்ஸ் முழுவதும் இடம்பெற்றது. உள்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்களின்படி, பாரிசில் 4,000 பேர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல் நாடு முழுவதும் இந்த வாரம் 33,700 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது கடந்த வாரத்தை விட குறைவாகும்.

கடந்த வாரம் பிரான்ஸ் முழுவதும் 40,500 பேர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரிஸில் மட்டும் 5,000 கலந்து கொண்டனர்.

சோம்ப்ஸ்-எலிசே நகரில் கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் போராளிகள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers